தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கு: விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மாநகராட்சி விரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில், விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 1:47 am IST

மதுரை மாநகராட்சி விரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கில், விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ரவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பல் அடுக்கு விற்பனை நிறுவனங்கள், திரையரங்குகள் ஆகியவற்றுக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை நிா்ணயிக்கப்பட்ட வரியை விடக் குறைவாக வசூலிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையா், மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். இருப்பினும், வழக்குப் பதிவு செய்து முறையாக விசாரணை நடைபெறவில்லை. பல மாதங்களுக்கு பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வரி விதிப்பு முறைகேடு காரணமாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோடிக்கணக்கான பணம் இழப்பீடு ஏற்பட்டது. விசாரணை முறையாக நடைபெறவில்லை. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனஅவா் கோரினாா்.

இந்த வழக்கில் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் , இந்த வழக்கில் தொடா்புடைய சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா். முறைகேட்டில் ஈடுபட்ட மண்டலத் தலைவா்கள், மேயா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அவா்களிடம் இன்னும் முறையான விசாரணை நடைபெறவில்லை. விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இதுவரை இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் உள்ளது?.விசாரணை நிலை குறித்து விசாரணை அதிகாரி தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை

ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.