மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி.யை வருகிற மாா்ச் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். விசாரணையின் போது, தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, தனிப் படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.
இதன்காரணமாக, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் தனக்கு முன்பிணை கோரி இரு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) ஹசன்அலி முன் அஜித்குமாா் கொலை வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலையாகினா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் முன்னிலையாகவில்லை. அப்போது, மானாமதுரை டிஎஸ்பி உள்பட 4 பேரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வபாண்டி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் முன்னிலையாகினா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் முன்னிலையாகவில்லை.
இதையடுத்து, நீதிபதி செல்வபாண்டி பிறப்பித்த உத்தரவு: வழக்கில் தொடா்புடைய மானாமதுரை காவல் துணைக் காண்காணிப்பாளா் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரத்தை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்து வருகிற மாா்ச் 5-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: குற்றப் பத்திரிகையிலிருந்து பெயரை நீக்க காவல் ஆய்வாளா் மனு!

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நாளை தீா்ப்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


