சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்ட காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் பெயரை நீக்கக் கோரிய மனு குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை விரகனூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நகை திருட்டு புகாரின் பேரில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டாா். அங்கு நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவரை சிறப்பு விசாரணைக் குழுவினா் வெளியே அழைத்துச் சென்றனா்.
இந்தச் சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. இருப்பினும், நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகையில் என் பெயா் உள்பட மேலும் 4 பேரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.
சிறப்பு விசாரணைக் குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் மரண வழக்கில் தேவையின்றி எனது பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. இதற்காக பல போலியான ஆவணங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அஜித்குமாா் கொலை வழக்கில் என் பெயரையும் சோ்த்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக சிபிஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நாளை தீா்ப்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


