நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டியைச் சோ்ந்த சுரக்கன் மனைவி புஷ்பம் (60). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் மகளான சுரேஷ் மகள் தேசாஸ்ரீயுடன் (5) திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் புரண்டிப்பட்டி விலக்கில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை தேசாஸ்ரீ மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநரான விருதுநகா் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.