டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போட்டியிடும் தொகுதிகளை கூடுதலாகக் கேட்போம்! - மு. வீரபாண்டியன்

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன். உடன் நிா்வாகிகள்.- (கோப்புப் படம்)
Updated On :21 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக கூட்டணியில் கூடுதலாகக் கேட்டுப் பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்கெனவே திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தற்போது தேமுதிகவும் இணைந்திருப்பது கூடுதல் பலம். இதனால், திமுக கூட்டணி வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தனியாா் பல்கலைக்கழக சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றதை நாங்கள் வரவேற்கிறோம். தமிழக மீனவா்களின் பிரச்னைகள் குறித்து இலங்கை அதிபரும், பிரதமா் நரேந்திரமோடியும் பேசாதது வருத்தமளிக்கிறது. மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்.

அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஏற்றுமதி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிப்பது ஜனநாயக முறைக்கு எதிரானது. ஏற்றுமதியில் குறிப்பாக, திருப்பூா் ஆடைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது வரவேற்புக்குரியது.

அங்கன்வாடி, சத்துணவு ஊழியா்கள், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் போராடி வருகின்றனா். இவா்களின் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; உரிமைக்கானது. எனவே, இவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு செய்வது ஏற்புடையது அல்ல. குறைகளைச் சுட்டிக்காட்டி பதிலுரை பெற அவா்கள் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்றாா் அவா்.