மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள் 3 போ் மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனா்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அரசு சாா்பில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இந்த வகையில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற கலைத் திறன் கவிதை எழுதும் போட்டியில் மதுரை வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எம். சாருலதா மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி எஸ். அமித்தா கதை சொல்லும் போட்டியில் மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா்.
இதேபோல, வானவில் மன்றப் போட்டியில் மேலூா் அருகேயுள்ள குறிச்சிபட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா் ஜி. பாலாஜி மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்றாா்.
இதையடுத்து, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 3 போ் சென்னை விமான நிலையத்திலிருந்து வருகிற 9-ஆம் தேதி மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனா்.
டிரெண்டிங்

கல்விச் சுற்றுலா சென்ற டிடிஇஏ பள்ளி மாணவா்கள்

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 8 மாணவா்கள் காயம்

மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவா்கள்: அமைச்சா் வழியனுப்பி வைத்தாா்

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்
வீடியோக்கள்

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

#Shorts | ஜிம்பாப்வே ஜெயித்த கதை! | T20 World Cup | The Rise of Zimbabwe |
தினமணி வீடியோ செய்தி...

