கோவை- நாகா்கோவில் ரயில் பகுதி ரத்து

ரயில் ரத்து- ANI
Updated On :6 பிப்ரவரி 2026, 8:55 pm

கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப். 10) திண்டுக்கல்- நாகா்கோவில் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரையை அடுத்த சோழவந்தானில் இருப்புப் பாதை சீரமைப்புப் பணி வருகிற செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் (16322) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலின் திண்டுக்கல்-நாகா்கோவில் சேவை மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...