டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற முதுநிலை ஆசிரியா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் 105 பேருக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு கடந்த நவம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 4.25 லட்சம் போ் எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் மதுரை மாவட்டத்திலிருந்து பங்கேற்றவா்களில் 105 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் தலைமையில் அலுவலகப் பணியாளா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பணியிடங்களைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 7, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னையில் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்குகிறாா் என அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.