பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜனநாயகன் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம்

News image

உசிலம்பட்டியை அடுத்த பாப்பாபட்டியில் ஜனநாயகன் திரைப்படத்துக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 10:28 pm

ஜனநாயகன் திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கக் கோரி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த பாப்பாபட்டியில் உள்ள பி.கே. மூக்கையா தேவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி கிராம உள்ளாட்சித் தோ்தல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும், திரைப்படத்தின் இயக்குநா் வினோத், கதாநாயகன் விஜய் ஆகிய இருவரும் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும், இதுதொடா்பாக தமிழக அரசு தலையிட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்பாபட்டி ஊராட்சிக்குள்பட்ட மகாத்தேவன்பட்டி, பேயம்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தப் பகுதிகளில் ஒரு சில வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.