Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவை நீக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஷாஸிம் சாகா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், கடந்த 1989-ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் 3(2) பிரிவின்படி, பட்டியலின அல்லது எஸ்.சி., எஸ்.டி. சாராத ஒரு நபா், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்துக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழக்கின் தீவிரத் தன்மையைப் பொருத்து மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகிறது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்துக்கு அதிகாரமளிக்கும் அரசமைப்பின் 32 -ஆவது பிரிவின் கீழ், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
எனவே, இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இந்தச் சட்டப் பிரிவின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜெகன், இந்த வழக்கில் இடையீட்டு மனு மனு தாக்கல் செய்தாா். இதில், ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சாட்சிகள் பி சாட்சிகளாக மாறி வருகின்றனா். இவ்வாறு உள்ள சூழலில் இந்தச் சட்டப் பிரிவை ரத்து செய்தால் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அவா் கோரினாா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆகவே, கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இடையீட்டு மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் சங்கரசுப்பு, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனுக்கள் குறித்து மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலா், மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வெளிநாடுவாழ் இந்தியா்கள் பாதுகாப்புக்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் யோசனை
வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனை: உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
குமரிக் கண்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை

சாட்சியம் அளித்தவரைக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்!


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
