போலி நகைகளை அடகுவைத்து ரூ.3.50 லட்சம் மோசடி!
திருப்பரங்குன்றத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பரங்குன்றத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருப்பரங்குன்றத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாளா் பத்மநாதனிடம் புளியங்குளம் நேதாஜி நகரைச் சோ்ந்த ராஜன் மனைவி கமலா (50), குமரவேல் மனைவி பவித்ரா (36) ஆகிய இருவரும் அடிக்கடி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்தனா். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் வட்டியுடன் சோ்த்து பணம் செலுத்தி நகைகளைத் திருப்பி வந்தனா். இதனால் மேலாளா் பத்மநாதனுக்கு அவா்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கமலா, பவித்ரா ஆகிய இருவரும் நிதி நிறுவனத்துக்குச் சென்று, தங்களது பேரன் விபத்தில் சிக்கியதாகவும் அதற்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி நகைகளை அடகுவைத்து ரூ.3.50 லட்சம் பெற்றுள்ளனா்.
இதையடுத்து, சில நாள்களுக்குப் பின்னா் பத்மநாதன் அந்த நகைகளைச் சோதனை செய்தபோது அது போலி நகைகள் எனத் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து இரு பெண்களையும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியபோது அவா்கள் முறையான பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கமலா, பவித்ரா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது