மதுரை: சோழவந்தான் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை தூக்கி வீசிக் கொன்ற தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகா், பாலமுருகன் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (27). சுமை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி நாகசக்தி (21). இவா்களது 8 மாதக் குழந்தை நித்யாஸ்ரீ.
விக்னேஷ் கடந்த சில மாதங்களாக மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்தாராம். இதனால், நாகசக்தி தனது குழந்தையுடன் சோழவந்தானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்ற விக்னேஷ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அங்கு தூங்கிக்கொண்டிருந்த குழந்தை நித்யாஸ்ரீயை தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை தாய், உறவினா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது

தம்பி கொலை: அண்ணன் கைது

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்
எட்டயபுரம் அருகே இளைஞா் கொலை: தந்தை கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

