திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோட்டூர்- கூழையனூர் இணைப்புப் பாலத் திட்டம் செயல்படுத்தப்படுமா?

தேனி, மே 6: போடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோட்டூர்- கூழையனூருக்கு இடையே, முல்லையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:15 pm

கோ.ராஜன்

தேனி, மே 6: போடி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோட்டூர்- கூழையனூருக்கு இடையே, முல்லையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோட்டூர், போடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூழையனூர் ஆகியவற்றுக்கு இடையே முல்லையாறு பாய்கிறது. ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்தால், கூழையனூரில் இருந்து 2 கி.மீ., தூரம் கோட்டூர் செல்லலாம். கோட்டூர்- கூழையனூர் வழியாக குறைந்த தூரத்தில் குச்சனூர் செல்லலாம்.

 கோட்டூர்- கூழையனூர் முல்லையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதால் துரைச்சாமிபுரம், அய்யநாதபுரம், குச்சனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், வருஷநாடு, தர்மாபுரி, தப்புக்குண்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயனடைவர். ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கடந்த 2011, ஏப்ரல் மாதம் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இணைப்புப் பாலம் மற்றும் சாலை அமைப்பதாக அறிவித்து, பூமி பூஜை நடைபெற்றது. தற்போது வரை திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அடித்தள கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த பொருள்களும் சில மாதங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

 கோட்டூரில் வங்கி, அரசு பாலிடெக்னிக், கல்லூரி ஆகியவை உள்ளன. மாணவர்கள், விவசாயிகள், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் பயனடையும் கோட்டூர்- கூழையனூர் இணைப்பு பாலம் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 கோட்டூர் ஊராட்சித் தலைவர் முத்துவேல் கூறியது: இணைப்புப் பாலம் திட்டம் மறு மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசு அனுமதி வழங்கியதும் பணிகளை மேற்கொள்ளவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர்கள் கூறுகின்றனர். ஆற்றில் நீர் வரத்து இல்லாத காலத்தை பயன்படுத்தி பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.