திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆற்றில் நீர்வரத்து இல்லை: குடிநீர்த் திட்டங்கள் செயலிழக்கும் அபாயம்?

தேனி, மார்ச் 4:  தேனி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றில் நீர் வரத்து இல்லாததால் குடிநீர் திட்டங்கள் செய

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:25 pm

கோ.ராஜன்

தேனி, மார்ச் 4:  தேனி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றில் நீர் வரத்து இல்லாததால் குடிநீர் திட்டங்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குடிநீர் வாரியம் மூலம் பாலகோம்பை குடிநீர் திட்டம், தென்கரை, லட்சுமிபுரம், ஊஞ்சாம்பட்டி, வள்ளல் நதி, அரப்படித்தேவன்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, ஜங்கால்பட்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடிநீர்த் திட்டங்கள், மயிலாடும்பாறை, கோயில்பாறை, குமணன்தொழு, சின்னச்சுருளி, காமராஜபுரம், சில்லமரத்துப்பட்டி, கே.பி.டி., சங்கராபுரம், டி.சிந்தலைச்சேரி, கோகிலாபுரம், காமாட்சிபுரம், வேப்பம்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம் பள்ளத்தாக்கு, உத்தமபாளையம் ஆகிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தனித் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

குடிநீர் திட்டங்களுக்கான உறைகிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் பெரும்பாலும் முல்லைப் பெரியாறு, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு மற்றும் வைகை ஆற்றுப் படுகைகளில் அமைந்துள்ளன.

தற்போது மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், ஆறுகள் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகின்றன. ஆற்றில் நீர் வரத்து இல்லாததாலும், குடிநீர்த் திட்டங்களை அமைத்துள்ள பகுதிகளில் மணல் அள்ளப்படுவதாலும், உறைகிணறுகளில் நீர் சுரப்பு குறைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் உறைகிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உறைகிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையாலும் குடிநீர்த் திட்டங்களில் இருந்து போதிய அளவு தண்ணீர் பம்பிங் செய்ய முடியாததால், குடிநீர் விநியோகத்தில் குளறுபடியும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தற்போது வாரம் ஒரு முறையும், சில இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.   குடிநீர்க் குழாய்களில் ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மோட்டார் பம்பை குழாயில் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கும், மோட்டார் பம்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நகராட்சிப் பகுதிகளில் டேங்கர் வாகனம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை எதிர்பார்த்து பெண்கள் குடங்களுடன் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

   குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க உறைகிணறுகளை சீரமைக்கவும், புதிய குடிநீராதாரங்களை உருவாக்கவும், குடிநீர் விநியோக குளறுபடிகளை முறைப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.