÷இந்த தீயணைப்பு நிலையத்தில், 2007-ல் 71 தீ விபத்துகள், 11 போக்குவரத்து விபத்துகள் என மொத்தம் 82 மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, 2008-ல் 43 தீ விபத்துகளும், 100 மீட்புப் பணிகளும், 2009-ல் 71 தீ விபத்துகளும், 90 மீட்புப் பணிகளும், 2010-ல் 72 தீ விபத்துகளும், 66 மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.÷ஆனால், காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. சிறிய அளவிலான ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத, இக் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக நகராட்சிக்கு ரூ. 102 வாடகை செலுத்தப்படுகிறது. 1948-ல் கட்டப்பட்ட பழமையான இக் கட்டடத்தில் தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் வீரர்கள் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.