ராமநாதபுரம், மார்ச் 30: ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியில் உள்ள கொடலைக்காரன் ஊருணியில் கழிவுநீர்த் தேங்கி சுத்தப்படுத்தப்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த துர்நாற்றத்தில் வசித்து வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
வசந்த நகர் பகுதியில் உள்ள கொடலைக்காரன் ஊருணி, ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் தங்களது அரண்மனையில் இருந்த யானைகளைக் குளிப்பாட்டுவதற்காகவே தோண்டப்பட்டதாகும். ஒரு காலத்தில் இந்த ஊருணியிலிருந்து சுத்தமான குடிநீர் கிடைத்துள்ளது. இதில் இரு பெரிய நல்ல தண்ணீர் கிணறுகளும் இருக்கின்றன.
இக்கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந்திருக்கிறது.
இந்த ஊருணியில் தவறி விழுந்த காசை எளிதாக எடுத்துவிட முடியம். அந்த அளவுக்கு, சுத்தமாகவும், தெளிவாகவும் தண்ணீர் இருந்துள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக, தற்போது கழிவுநீர்த் தேங்கி மிகுந்த துர்நாறóறத்துடன் நோய்க் கிருமிகளை பரப்பும் ஊருணியாக மாறிவிட்டது.
அரண்மனை பகுதிகள், செட்டியாரó தெரு, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஊருணியில் வந்துசேருகிறது. இதனால், துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. மேலும், இங்கிருந்த இரு நல்ல தண்ணீர் கிணறுகளும் அசுத்தமடைந்துள்ளன.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பத்திரப் பதிவுத் துறையிலிருந்து
ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர் ராமச்சந்திரன், கருப்பசாமி, மகளிர் மன்ற நிர்வாகிகள் காளீஸ்வரி, ஜோதி, ஹாரீஸ்வரி ஆகியோர் தெரிவித்ததாவது:
இப்பகுதி மக்கள் குடிக்கவும், குளிக்கவும் தண்ணீரை வெளியில் விலைக்குத்தான் வாங்குகிறோம். வீட்டுக் கிணறுகளிலும், குழாய்களிலும் துர்நாற்றம் கலந்த கழிவுநீர் தான் வருகிறது.
இதன் காரணமாக, இங்குள்ள பிள்ளைக்காளியம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிகிச்சைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்த ஊருணியில் சேரும் கழிவுநீரை இந்திரா நகரில் பம்ப் செட் வைத்து
நகராட்சி வெளியேற்றியது. ஆனால், கடந்த 6 மாதங்களாக பம்பிங் செய்யாததால், கழிவுநீர் அதிகமாக தேங்கி வீடுகளைச் சூழ்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என்பதால், விரைவில் இங்குள்ளவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குடும்ப அட்டைகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

