திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

போக்குவரத்து பாதிப்பு

மதுரை,  டிச. 20: மதுரை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்படும் டீஸல் ஆட்டோக்களால் அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மாநகரில் சுமார் 15 ஆயிரம் ஆட்டோக்கள

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:37 pm

ஜெயப்பாண்டி

மதுரை,  டிச. 20: மதுரை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்படும் டீஸல் ஆட்டோக்களால் அதிக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 மாநகரில் சுமார் 15 ஆயிரம் ஆட்டோக்களுக்கு மேல் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் பழைய ஆட்டோக்கள் 12 ஆயிரம் வரை இருக்கின்றன. வடக்கு வட்டத்தில் 6872, தெற்கு வட்டத்தில் 3700 என பழைய ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றில் டிரைவர் தவிர்த்து கண்டிப்பாக 3 பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது போக்குவரத்து விதி என போக்குவரத்து போலீஸôர் கூறுகின்றனர்.

 அதேபோல, மதுரையில் 65 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு வட்டத்தில் 25, தெற்கு வட்டத்தில் 25 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் ஒவ்வொன்றிலும் டிரைவர் தவிர 5 பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது விதியாகும்.

 இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளாக மதுரையில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட டீஸல்  ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களும் சாதாரண ஆட்டோவுக்கு உரிய பெர்மிட் விதிமுறைகளுடனேயே இயக்கப்பட வேண்டும். ஆனால், ஆட்டோக்களின் வடிவமைப்பு கூடுதல் ஆள்களை ஏற்றும் வகையில் உள்ளதாகக் கூறும் போலீஸôர், மத்திய அரசே இத்தகைய ஆட்டோக்களை தயாரிக்க அனுமதி அளிக்கிறது. ஆனால், அதற்கான விதிமுறைகளை புதிதாக உருவாக்கவில்லை. இதனால், இந்த ஆட்டோக்கள் விதிமுறைகளுக்கு உள்படாமல் இயக்கப்படும் சூழ்நிலை உருவாகிறது என்றும் கூறுகின்றனர்.

 இந்த வகை ஆட்டோக்களில், சாதாரண ஆட்டோக்களை போலவே டிரைவர் மற்றும் 3 பயணிகளையே ஏற்றவேண்டும். ஆனால், கூடுதல் ஆள்களை ஏற்றும் வகையில் டீஸல் ஆட்டோக்கள் இருக்கின்றன. டிரைவர் அருகே மற்றொருவர் உட்காரும் வகையில் இருக்கைகளை அமைத்துள்ளனர்.

  பஸ் நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்துதல், அதிக பயணிகளை ஏற்றிச்செல்லுதல் என பல வகையில் விதிகளை மீறி செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 மோட்டார் சைக்கிளில் செல்வோர் அதிகமாக விபத்துக்குள்ளாவதற்குக் காரணம், ஆட்டோக்கள் சாலையில் விதிமீறுவதுதான் எனவும் கூறப்படுகிறது.

  மாநகரில் தினமும் ஆட்டோக்கள் மீது மட்டும் சுமார் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது எனவும் போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி தெரிவிக்கிறார்.

 மாதத்தில் மாநகரில் போக்குவரத்து விதிமீறியதாக வாகனங்கள் மீது விதிக்கப்படும் அபராதங்களில் சுமார் 60% அபராதத் தொகை ஆட்டோக்களிடமே வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

  மாநகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும், ஆட்டோக்களை திடீர் சோதனை மூலம் பரிசோதித்த போது, சுமார் 250 ஆட்டோக்களுக்கும் மேலாக வெளியூர் பெர்மிட்டில் இயங்கியது தெரியவந்தது. மேலும் 50 ஆட்டோக்களுக்கும் மேலாக உரிய ஆவணங்கள் இன்றியும் இயங்கிவந்துள்ளன.

 இதையடுத்து மாநகர் போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியத்தின் உத்தரவின்பேரில், போக்குவரத்து போலீஸôர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, வெளிமாவட்ட பெர்மிட் ஆட்டோ உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.

 இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆட்டோக்களில் 50 ஆட்டோக்கள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. மற்ற ஆட்டோக்கள் அனைத்தும் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஆட்டோக்களை ஏலம் விடவும் சட்டத்தில் இடமில்லை என்பதால், அவை துருப்பிடித்து பயனற்றுப்போகும் நிலையில்  உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 நகரில் ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போலீஸôர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், எல்லீஸ் நகர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பஸ்களுக்கு இணையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு ஆள்களை ஏற்றிச்செல்வது வழக்கமாக இருந்துவருகிறது.

 போக்குவரத்து விதிகளை மீறி பாலத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தும், போலீஸôர் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதே பொதுமக்களது குற்றச்சாட்டாகும்.      

 பெரியார் பஸ் நிலையப் பகுதியிலிருந்து அரசரடி பகுதிக்குச் செல்லும் ஆட்டோக்கள் விதியை மீறினாலும், அவற்றுக்கு ரசீது இல்லாமல் அபராதம் போல பணம் வசூலிக்கும் போக்கும் சில போக்குவரத்து போலீஸôரிடம் இருப்பதாகவும் தெரியவருகிறது.

 மாநகரில் ஆட்டோக்கள் விதிமீறுவதால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னை மற்றும் விபத்தைத் தடுக்க போலீஸôர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.