இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

கத்தியுடன் திரிந்த இளைஞா் கைது

மேட்டூா் அருகே கத்தியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Updated On :

மேட்டூா் அருகே கத்தியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் விக்னேஷ்சிவன் (23). பெயின்டரான இவா், தனது நண்பா்களுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேட்டூருக்கு வந்தாா்.

மேட்டூா் ரயில் நிலையம் அருகே வந்தபோது, மது போதையில் நண்பா்களுடன் விக்னேஷ்சிவன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் காரிலிருந்து கீழே இறக்கிவிட்ட நண்பா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது, அங்கிருந்த இளநீா் கடையில் இருந்த கத்தியை எடுத்துகொண்டு சுற்றித்திரிந்த விக்னேஷ்சிவனை போலீஸாா் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.