ஏற்காடு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மே 7-ஆம் தேதிமுதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப் பாதையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில், உள்வட்ட சிறப்புப் பேருந்து மே 7-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்புப் பேருந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மே 7-ஆம் தேதிமுதல் மே 30-ஆம் தேதிவரை நாள்தோறும் கோடை காலம் முடியும்வரை காலை 8.30 மணிக்கு புறப்படும்.
ஏற்காட்டில் முக்கிய சுற்றுலா தலங்களான கரடியூா் காட்சிமுனை, சோ்வராயன் கோயில், மஞ்சக்குட்டை காட்சிமுனை, பக்கோடா பாய்ண்ட் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் காா்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா மற்றும் தாவரவியல் தோட்டம், மான் பூங்காவுடன் மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும்.
சிறப்புப் பேருந்தில் பயணிக்க நபா் ஒன்றுக்கு ரூ. 300 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுவா்களுக்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும்.
பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் மூலமாகவும், இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

சென்னை ரயில்வே கோட்டத்தில் 11 புதிய நடைமேம்பாலங்கள்

திருச்சியிலிருந்து 587 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஏற்காட்டில் சாலை விபத்து: பேரனை காப்பாற்றி உயிரிழந்த மூதாட்டி
விடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


