தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் அலுவலா் மயில்மேல் அழகன் தலைமையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வைத்திருந்த ரூ. 2.30 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் காத்தமுத்து, தோ்தல் துணை வட்டாட்சியா் பரசுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: ரூ. 69,800 பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


