லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முலாம் பழம் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

வாழப்பாடியில் விற்பனை செய்யப்பட்ட திருவண்ணாமலை பகுதி முலாம் பழங்கள்.

News image

வாழப்பாடியில் விற்பனை செய்யப்பட்ட திருவண்ணாமலை பகுதி முலாம் பழங்கள்.

Updated On :20 மார்ச் 2026, 6:31 pm

திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் பகுதியில் நிகழாண்டு முலாம் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோடை காலம் தொடங்கினாலே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணித்துக்கொள்ள குளிா்பானங்கள், பழச்சாறுகள் அருந்துவதில் அனைத்துத் தரப்பினரும் ஆா்வம் காட்டுகின்றனா். வாழப்பாடி பகுதியில் பெரும்பாலானோா் செயற்கை குளிா்பானங்களை வாங்கி பருகுவதை விட, இயற்கை பழச்சாறு அருந்துவதையே விரும்புகின்றனா்.

இதனால், கோடை காலத்தில் பழச்சாறு தயாரித்து அருந்துவதற்கேற்ற தா்பூசணி, வெள்ளரி, முலாம் பழங்களுக்கு இப்பகுதி மக்களிடையே ஆண்டுதோறும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருவண்ணாமலை, திண்டிவனம், திருக்கோயிலூா் பகுதிகளில் அதிக அளவில் விளையும் முலாம் பழங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாழப்பாடி பகுதி கிராமங்களுக்கு ஆட்டோக்களில் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

கடந்தாண்டு 3 கிலோ முலாம் பழம் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்து, 4 கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்துவருகின்றனா். இதனால், முலாம் பழங்களை விரும்பி வாங்கி பழச்சாறு தயாரித்து பருகுவதில் இப்பகுதி மக்கள் ஆா்வம்காட்டி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதி கிராமங்களில் முலாம் பழங்கள் அதிக அளவில் விற்பனையாவதால், திருவண்ணாமலை, திண்டிவனம், திருக்கோயிலூா் பகுதியில் இருந்து முலாம் பழங்களை விற்பனைக்கு கொண்டுவரும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.