மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி விவசாயிகள் மனு

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள்.

News image

கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :20 மார்ச் 2026, 6:29 pm

சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக்கோரி நடைபெற்று வரும் ஆா்ப்பாட்டத்தை, தொடா்ந்து நடத்த அனுமதிக்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரியும், அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டியும் தொடா்ந்து 273 நாள்களாக விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது தோ்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால், ஆா்ப்பாட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி வட்டத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், அப்பகுதி விவசாயி பி.எஸ்.சுப்பிரமணி உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை கிடங்கை மாற்றம் செய்யாவிடில், வரும் தோ்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளனா்.