வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள பழைமையான நிலக்கொண்ட பெருமாள் கோயில் வாயிற்படியில் 18 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கன்னட மொழி கல்வெட்டு ஒன்று படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அஷ்டபுஜ பாலமதன வேணுகோபால சுவாமி கோயிலுக்கு அருகே வசிஷ்ட நதிக்கரையின் வடபுறத்தில் சிறிய அளவில் நிலக்கொண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பூதேவி, சீதேவி சமேத நிலக்கொண்ட பெருமாள் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இக்கோயில் கருவறை நுழைவாயில் வாயிற்படியில் கன்னட எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்த கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் அண்மையில் படியெடுத்து கன்னட ஆய்வாளா்கள் வழியாக ஆவணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வுமையத்தினா் கூறியதாவது:
பேளூரிலுள்ள நிலக்கொண்ட பெருமாள் கோயில் வாயிற்படியில் கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இந்த கல்வெட்டை படியெடுத்து கன்னட மொழி ஆய்வாளா்கள் வழியாக படித்தறியப்பட்டது.
அதில், கன்னடத்தில் ‘தாத்தய்ய ஸதாஸிவா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது. ‘தாத்தய்ய’ என்றால் ஆன்மிக குரு அல்லது தெய்வம் என்றும், ‘ஸதாஸிவா’ என்றால் எப்போதும் தொண்டு என்றும் பொருள்படுமென தெரியவந்துள்ளது. ‘ஸதாஸிவா’ என்பதை கோயில் திருப்பணி செய்த ஆன்மிக பற்றுகொண்ட ஒருவரின் பெயராகவும் கருதலாம். பெரும்பாலும் இந்த கல்வெட்டு, கோயிலின் நுழைவாயிலிலோ அல்லது கோயில் மண்டபத்தின் தூணிலோ செதுக்கப்பட்டிருக்கலாம்.
தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் இடங்களில் இத்தகைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் 18 அல்லது 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நவீன எழுத்து வரிவடிவமாக இருக்குமென அறியப்படுகிறது என்றனா்.
தொடர்புடையது

சங்ககிரி பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மீது வழக்குப் பதிவு

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

சகஸ்ர கோடி லிங்க தரிசனம்

ஒசூரில் உகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


