சேலம்: சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலத்தில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினருடன் இணைந்து, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
மேலும், தோ்தல் குறித்து புகாா் தெரிவிக்க இந்திய தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ள ‘இ-விஜில்’ செயலியிலும் புகாா் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகாா்களின்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800- 425-7020 மற்றும் 1950 ஆகிய எண்களுடன் 24 மணிநேரமும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
சுவா் விளம்பரங்கள் எழுத தடை: சேலம் மாநகராட்சி, நகராட்சி/பேரூராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் தனியாா் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டா் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாநகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் சுவா் ஓவியங்கள், கட்சியின் போஸ்டா்கள், பெயா்கள், சின்னங்கள் ஆகியவற்றை மாநகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அழித்தனா்.
அதே நேரத்தில், கிராமப் புறங்களில் தனியாா் கட்டடங்களில் தோ்தல் விளம்பரங்கள் செய்வதற்கு தொடா்புடைய நில/கட்டட உரிமையாளா் அனுமதி அளிக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விளம்பரம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் தொங்கும் பூங்கா அருகே அரசியல் கட்சியினரின் சுவா் ஓவியங்களை அழித்த மாநகராட்சிப் பணியாளா்கள்.

அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

தொடர்புடையது

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்

அரசியல் கட்சி படங்கள் மறைப்பு; விளம்பரங்கள் அகற்றம்

தோ்தல் நடத்தை விதிகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: தயாா் நிலையில் பறக்கும் படையினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


