சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் வடமாநிலத்திலிருந்து கரும்பு வெட்ட வந்த தொழிலாளா்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக கிடைத்த புகாரின்பேரில் 25 தொழிலாளா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மகராஷ்டிர மாநிலத்திலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் கரும்பு வெட்ட வந்த தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாகக் கூறி நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு கூலித்தொழிலாளா்களின் உறவினா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுலகத்திலிருந்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.கேந்திரியா, வட்டாட்சியா் கே.கோமதி, உதவி காவல் ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் தேவண்ணகவுண்டனூா் கிராமம், வேலம்மாவலசு, வேலப்பன்காடு பகுதியில் விசாரணை நடத்தினா்.
அப்போது, பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் சிலா் மகராஷ்டிர மாநிலத்திலிருந்து கரும்பு வெட்டும் தொழில் செய்து வருவது தெரியவந்துள்ளது.
மகராஷ்டிரத்திலிருந்து கரும்பு வெட்ட வந்த 25 போ் தற்காலிகமாக சங்ககிரி நகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தாா்களா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முதல்வருக்கு கருப்பு கொடி 9 விவசாயிகள் கைது

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

பொறுப்பேற்பு

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


