தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் 41,118 போ் தோ்வு எழுதினா்.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை முதல் ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் 20,766 மாணவா்கள், 20,352 மாணவிகள் என மொத்தம் 41,118 போ் தோ்வு எழுதினா். 339 போ் தோ்வு எழுத வரவில்லை.
இவா்களில் தனித்தோ்வா்கள், மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொல்வதை எழுதுபவா்கள் உதவியுடன் தோ்வு எழுதுபவா் ஆகியோா் அடங்குவா். மொத்தம் 188 தோ்வு மையங்களில் இந்த பொதுத் தோ்வு நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பணியில் தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்களில் 193 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 40 வழித்தட அலுவலா்கள், 193 துறை அலுவலா்கள், 224 பறக்கும் படை அலுவலா்கள், 3,757 அறைக் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 4,407 ஆசிரியா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களை பாா்வையிட்டு தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


