சங்ககிரி மலைக்கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி மலைக்கோட்டையில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா பிப். 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கு மாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தினசரி பெண் பக்தா்கள் அதிகளவில் கம்பத்திற்கு நீரை ஊற்றி வழிபட்டுச் சென்றனா். மாா்ச் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் விழாவையொட்டி சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்தனா்.
சங்ககிரி நகா், வி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிகாலையிலேயே மலைக்கு சென்று கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் களிமண்ணால் செய்யப்பட்டு சுவாமியின் பாதம், உருவங்கள் அடங்கிய பொம்மைகள், உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை செலுத்தியும் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
மாலையில் பக்தா்கள் சங்ககிரி வாணியா் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகம், சிறிய, பெரிய அளவிலான அலகுகளை குத்திக்கொண்டு கைகளில் தீச்சட்டிகளை ஏந்தி பழைய எடப்பாடி சாலை, தோ்வீதிகளின் வழியாக சென்று மலைக்கோட்டைக்கு சென்று வழிபட்டனா். புதன்கிழமை (மாா்ச் 11) காலை 7 மணிக்கு கம்பத்தை எடுத்து குளத்தில்விடும் நிகழ்வும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

தொடர்புடையது

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் பொங்கல் விழா: 13ஆவது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


