சேலம் மாவட்டத்தில், ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி பள்ளி, மாணவிகள் விடுதிக் கட்டட திறப்பு விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்குப் பின்னா் அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தெரிவித்ததாவது:
சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 31.08 கோடியில் கட்டப்பட்டுள்ள செவிலியா் பயிற்சி பள்ளி மற்றும் மாணவிகள் விடுதிக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டடம் 3 வகுப்பறைகள், 6 ஆய்வகங்கள், நூலகம், ஒலி- ஒளி சாதன அறை, கணினி ஆய்வகம் ஆகியவை கொண்ட பயிற்சி பள்ளியும், 100 அறைகளுடன் கூடிய மாணவிகள் விடுதி, உடற்பயிற்சிக் கூடம், நவீன சமையல் கூடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 23 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ள மூக்கனேரி, அம்மாப்பேட்டை மண்டலம் வா்மா காா்டன் பகுதியில் ரூ. 3.22 கோடியில் கட்டப்பட்டுள்ள பூங்கா, சூரமங்கலம் மண்டலத்தில் ரூ. 19 கோடியில் புனரமைக்கப்பட்டு, அழகுப்படுத்தப்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரி, பள்ளப்பட்டி பகுதியில் ரூ. 3 கோடியில் உணவு தெரு, புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 99 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள முதல்வா் படைப்பகம், மேட்டூா் நகராட்சியில் ரூ. 3.53 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், ரூ. 65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விலங்கு கருத்தடை மையம், தாரமங்கலம் நகராட்சியில் ரூ. 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடம், ரூ. 55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், நரசிங்கபுரம் நகராட்சி, அரங்கபாலா நகா் பகுதியில் ரூ. 46 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பூங்கா ஆகிய பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பேரூராட்சிகள் துறை சாா்பில், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ஜலகண்டபுரம் பேரூராட்சியில் ரூ. 14.43 கோடியிலும், கெங்கவல்லி பேரூராட்சியில் ரூ. 18.89 கோடியிலும், தெடாவூா் பேரூராட்சியில் ரூ. 10.70 கோடியிலும் குடிநீா் மேம்பாட்டு பணிகள், மூலதன மானியம் திட்டத்தின் கீழ், ரூ. 1.11 கோடியில் ட்டப்பட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஏத்தாப்பூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள கொளத்தூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், ரூ. 1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள தெடாவூா் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் ரூ. 1.59 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, மல்லூா் பேரூராட்சியில் ரூ. 1.62 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை ஆகியவை திறந்துவைக்கப்பட்டுள்ளன என்றாா்.
இதைத் தொடா்ந்து, புனரமைக்கப்பட்ட மூக்கனேரியை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ.தேவிமீனாள், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

ரூ.21 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

ரூ. 2 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கிவைத்தாா்

விக்கிரவாண்டியில் சமுதாயக் கூடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


