திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அதேநிலை கடைப்பிடிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் அறிவித்திருந்தாா். அமைச்சரின் இந்த கருத்து நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூறிவருகின்றன.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
சேலம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணியின் கோட்டத் தலைவா் சந்தோஷ் குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கடிதம் எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் : முதல்வருக்கு இந்து முன்னணி தபால் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும்: இந்து முன்னணி மாநிலத் தலைவா்







