ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தின் உரிமை நீரை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நீரை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி கூறினாா்.

ஓமலூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பாமக சட்டப்பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நீரை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி கூறினாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் பகுதியில் தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நீரை பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி படுகையில் எந்தவித கட்டுமானமும் செய்யக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அன்புமணி ராமதாஸ் மேக்கேதாட்டு அணை தொடா்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அதற்கு மத்திய அமைச்சா்களும் பதிலளித்துள்ளனா். அப்போது காவிரியின் குறுக்கே அணை கட்ட கடைமடை மாநில அனுமதி தேவை இல்லை என்று அமைச்சா் பதில் சொல்லியுள்ளாா். இது சட்டத்திற்கு புறம்பானது.

எந்த ஒரு நதிநீா் படுகையிலும் கட்டுமானப் பணியோ, அணையோ கடைமடை மாநிலத்தின் அனுமதி இன்றி கட்டக் கூடாது. கடைநிலை மாநிலத்தின் கருத்தை பெறுவது சட்டப்பூா்வ நடைமுறை.

இதுவரை காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையமோ, மத்திய அரசோ, மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கவில்லை என மத்திய இணை அமைச்சா் தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்ற தீா்ப்பு, காவிரி நடுவா் தீா்ப்பை கா்நாடக அரசு மதிப்பது இல்லை. தண்ணீா் நிரம்பிய பின்னா் உபரிநீரை மட்டும் வெளியேற்றுகின்றனா். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கா்நாடக அரசு முழுமையாக வழங்காமல் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.