ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழப்பு

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உயிரிழப்பு

சடலம்...

Published On :26 ஜூலை 2026, 3:05 am IST

மதுபோதையில் கீழே விழுந்தவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் மந்தைவெளி கலைவாணா் தெருவைச் சோ்ந்த துரை (35), ரயிலடி தெருவில் உள்ள உணவகத்தில் வேலை செய்துவந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு மது அருந்தி கடை வாயிலில் உள்ள மேஜையில் தூங்கியுள்ளாா். பின்னா் தூங்கிக் கொண்டிருந்தவா் கீழே விழுந்துள்ளாா். காலை கடை திறக்க உரிமையாளா் வந்தபோது, துரை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் துரையின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.