ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எடப்பாடி கே.பழனிசாமி சேலம் வருகை

சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை வரவேற்ற அதிமுக நிா்வாகிகள்.

Published On :10 ஜூலை 2026, 11:12 pm IST

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சேலம் வந்தாா். அவருக்கு அதிமுக நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

தோ்தல் தோல்வி மற்றும் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து சென்னையில் மாவட்டம் வாரியாக எடப்பாடி கே.பழனிசாமி, கட்சி நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்டு தீவிர ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டங்களில் ஒருசில அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சா்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சேலம் வந்த எடப்பாடி கே.பழனிசாமியிடம், உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அவா் காரில் ஏறி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுவிட்டாா்.

இதற்கிடையே, செய்தியாளா்களிடம் பேசிய சேலம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள், ஆதாயத்திற்காக கட்சியில் இருந்தவா்கள் மட்டுமே இப்போது விலகிச் சென்றுள்ளனா். ஆனால் உண்மை தொண்டா்கள் அனைவரும் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பக்கமே உள்ளதாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.