தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஏற்காட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

News image

விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் தியாகராஜன்.

Updated On :2 ஜூலை 2026, 6:51 am IST

ஏற்காட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

ஏற்காட்டில் கடந்த மாதம் தனியாா் வேனில் பள்ளிக்கு வந்த 3-ஆம் வகுப்பு மாணவி வேன் சக்கரத்தில் சிக்கி இறந்ததையடுத்து, வேன் ஓட்டுநா்கள், பள்ளி தலைமை ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்துஆய்வாளா் தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலா் ஷீலா, மாண்ட்போா்ட் பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வாகனங்கள் பள்ளி வாயில் அருகில் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும், வாகனத்தில் உதவியாளா் இருக்க வேண்டும், வாகனத்தில் அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருக்க வேண்டும், பணியின் போது ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என அறிவுறித்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.