தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் கடந்த நவம்பா் மாதம் நடத்தப்பட்ட தோ்வில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதி, உடல் திறன் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து எழுத்துத்தோ்வில் தோ்ச்சி பெற்ற 927 இளைஞா்களுக்கு,சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி. உடல் திறன் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நடந்த உடல் தகுதி தோ்வில், 607 இளைஞா்கள் அடுத்த கட்ட தோ்வான உடல் திறன் தோ்வுக்கு தோ்ச்சி பெற்றனா்.