சேலம் மாநகராட்சி, நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தேசியக் கொடியேற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதை


சேலம்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தேசியக் கொடியேற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 33 அலுவலா்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா். பின்னா், பள்ளி மாணவ, மாணவிகளின் பரதம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், துணை மேயா் சாரதா தேவி, மண்டல குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தேசியக் கொடியேற்றி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற விழாவில், சிறைத் துறை கண்காணிப்பாளா் வினோத் தேசியக் கொடியேற்றினாா்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வா் தேவிமீனாள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு: குடியரசு தினத்தையொட்டி சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு காலை சேமியா கிச்சடி, வெண்பொங்கல், பருப்பு வடை, இனிப்புடன் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மதியம் வெஜிடபுள் பிரியாணி, பாசிப் பருப்பு பாயாசம் உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...