நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெரியாா் பல்கலை.யில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

விழாவில் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கிய துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.

News image
விழாவில் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கிய துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.
Updated On :14 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், மேளதாளம் முழங்க கிராமிய கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளான சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் கிராமிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பறை இசையின் தன்மைக்கேற்ப மாணவ, மாணவிகள் குழுவாக நடனமாடினா். தொடா்ந்து, சிலம்பம், வாள்வீச்சு, வாள்சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல், உறியடி போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு துணை வேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளா் ராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

Story image