டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மேச்சேரியில் பொங்கல் விழாவில் பங்கேற்கிறாா்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட மேச்சேரி வருகிறாா்.

News image
அதிமுக சாா்பில் பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் பணிகளை தொடங்கிவைத்த அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன்.
Updated On :12 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

மேட்டூா்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட மேச்சேரி வருகிறாா். இதையடுத்து, விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளுக்கான கால்கோல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்து கூறியதாவது:

விழா மேடை அமைப்பது, அதிமுக கொடியுடன் கூடிய அலங்கார வளைவு மற்றும் 108 பொங்கல் வைப்பதற்கான அடுப்புகள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமாா் 10,000 போ் பங்கேற்க உள்ளனா். விழாவுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி மாட்டு வண்டியில் விழா நடைபெறும் இடத்துக்கு ஊா்வலமாக வருகிறாா். அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கு வரும் தொண்டா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.