பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 10:34 pm

Syndication

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு மைய துணை இயக்குநா் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் என சுமாா் 1,000க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சேலம் மாவட்டத்தில் 368 விதை மாதிரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 1,241 விதை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், 138 மாதிரிகள் தரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக விதை உற்பத்தியாளா், விநியோகிப்பாளா், விற்பனையாளா் என 14 போ் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விற்கப்பட்ட 302 வகை விதைகள், நாமக்கல் மாவட்டங்களில் 60 வகை விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 85.45 டன் தரமற்ற விதைகள் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 3.7 கோடி ஆகும். விதிகளைக் கடைப்பிடிக்க தவறிய 8 விதை விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.