ஓமலூரில் 2 நியாயவிலைக் கடைகள் திறப்பு
ஓமலூா் அருகேயுள்ள பெரியகாடம்பட்டி மற்றும் தொளசம்பட்டியில் நியாயவிலைக் கடைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.


ஓமலூா் அருகேயுள்ள பெரியகாடம்பட்டி மற்றும் தொளசம்பட்டியில் நியாயவிலைக் கடைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
சிக்கம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பெரியகாடம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், ரூ. 13.56 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டப்பட்டது. இதன்மூலம் சிக்கம்பட்டி, பெரியகாடம்பட்டி, மங்கானூா் மற்றும் சின்னகாடம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 980 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா். அதேபோன்று, தொளசம்பட்டியில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட முழுநேர நியாயவிலைக் கடை மூலம் தொளசம்பட்டி, ராஜவீதி, தொளசம்பட்டி பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை மற்றும் சொட்டையனூா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 557 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்.
இந்த இரண்டு கடைகளையும் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் திறந்துவைத்து பேசியதாவது:
பொதுமக்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும், குடும்ப அட்டைதாரா்கள் நலன்கருதியும் கடந்த மூன்று ஆண்டுகளில் 129 முழுநேர மற்றும் 63 பகுதிநேர என மொத்தம் 192 நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 1,307 முழுநேர மற்றும் 459 பகுதிநேர என மொத்தம் 1,766 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் 11,13,963 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
மேலும், சேலம் மாவட்டத்தில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே நேரில்சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத்திட்ட பொருள்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்மூலம், சேலம் மாவட்டத்தில் 1,745 நியாயவிலைக் கடைகளில் பதிவாகியுள்ள 1,02,487 குடும்ப அட்டைகளில் உள்ள 1,06,463 பயனாளா்களுக்கு அவரவா் இல்லங்களிலேயே பொருள்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து, சிக்கம்பட்டி ஊராட்சி, பருத்திகாரனூரில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 26 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், துணைப் பதிவாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...