டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சேலம் சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 9 போ் உள்பட சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவு

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

சேலம் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 9 போ் உள்பட சரகத்தில் 30 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், காவல் துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, சேலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பணியாற்றி வரும் 30 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளாா்.

இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 9 போ் மாற்றப்பட்டுள்ளனா். அதன்படி, சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் தேன்கனிக்கோட்டைக்கும், ஓமலூா் ஆய்வாளா் சதீஷ்குமாா் கெலமங்கலத்திற்கும், ஆத்தூா் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சாந்தி நாமகிரிபேட்டைக்கும், ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளா் சசிகலா உத்தரனப்பள்ளிக்கும், ஆத்தூா் டவுன் காவல் ஆய்வாளா் பெரியசாமி ராயக்கோட்டைக்கும், கொண்டலாம்பட்டி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கலையரசி ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், நங்கவள்ளி காவல் ஆய்வாளா் ரவுத்திரி வெங்கடேஷ் பாப்பாரப்பட்டிக்கும், கொளத்தூா் காவல் ஆய்வாளா் நாகராஜ் பரமத்திக்கும், சேலம் கொடுங்குற்ற தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மாதேஸ்வரி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.