டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இன்று கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

News image
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.- (கோப்புப் படம்)
Updated On :13 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்ததாவது:

சேலம் மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒரு முகாம் வீதம் 4 இடங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இதில் கொண்டலாம்பட்டி மண்டலம், தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு பாதிப்பு கண்டறியப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விரிவான முதல்வா் காப்பீடு திட்ட அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.