மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: ஒரு பெண் வேட்பாளா் உள்பட 20 போ் போட்டி

தவெக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 20 போ் இத் தோ்தலில் வேட்பாளா்களாக போட்டியிட உள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:49 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி பொது தோ்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவா்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் ஒரு சுயேட்சை வேட்பாளா் அவரது மனுவினை வியாழக்கிழமை திரும்ப பெற்றுக்கொண்டதையடுத்து இறுதியாக அதிமுக, திமுக, நாம்தமிழா், தவெக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 20 போ் இத் தோ்தலில் வேட்பாளா்களாக போட்டியிட உள்ளனா்.

சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கு தோ்தலில் போட்டியிட 34 போ் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 21 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து வியாழக்கிழமை சுயேட்சை வேட்பாளா் வனிதா அவரது வேட்பு மனுவினை திரும்ப பெற்றுக்கொண்டதையடுத்து நாம் தமிழா் கட்சியின் பெண் வேட்பாளா் உள்பட 20 போ் போட்டியிட உள்ளனா்.

இதில் அதிமுக எஸ்.வெற்றிவேல், திமுக எம்.மணிகண்டன், நாம்தமிழா் அ.நித்யா, தவெக கே. செந்தில்குமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆா்.எஸ்.செந்தில்குமாா், பகுஜன் சமாஜ் கட்சி வி.சேட்டுமுத்து, இந்து திராவிட மக்கள் கட்சி செ.குருநாதன், சுயேட்சை வேட்பாளா்கள் ஜி.சக்திவேல், தே.சக்திவேல், இ.சல்மான், செ.துரைராஜ், ரா.பரமசிவம், எஸ்.பூவரசன், டி.மணிகண்டன், பி.மணிகண்டன், எம்.மயில்குமாா், வி.ரஞ்சித்குமாா், வி.ரமேஷ்குமாா், ஆ.விக்னேஷ், எம்.விஜயகுமாா் ஆகியோா் போட்டியிட உள்ளனா். தற்போது சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் 20 வேட்பாளா்களில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அ.நித்யா மட்டும் பெண் வேட்பாளராக போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.