

சேலம் நகரப் பகுதியாக இருந்தாலும், சேலம் தெற்கு தொகுதி சுகாதாரம் மற்றும் போக்குவரத்துப் பிரச்னை தீர்க்க முடியாததாக உள்ளது.
இதனிடையே, புதை சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளன. சேலம் பழைய பேருந்து நிலையம் முதல் தாதகாபட்டி வரை சாலை விரிவாக்கம் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சேலம் தனிக் குடிநீர்த் திட்டத்தில் முழுமையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நிலத்தடி நீரும் குறைந்து, குடிநீர்த் தட்டுப்பாடு முக்கியப் பிரச்னையாக உள்ளது.
அதேபோல, சேலம் நகரப் பகுதியில் உள்ள கிச்சிபாளையம், எருமாபாளையம் குப்பைமேட்டால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திருமணிமுத்தாறு திட்ட விரிவாக்கம் ஆகியவை தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளன.
திருமணிமுத்தாறில் கலக்கும் கழிவுகளை அகற்றி, தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குகை பகுதியில் விசைத்தறிகளுக்குரிய சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், திருமணிமுத்தாறில் சாயக் கழிவு நீர் கலக்கிறது.
அம்மாபேட்டை மற்றும் மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், குகை மற்றும் தாதகாபட்டி ஆகிய பகுதிகள் நெரிசல் மிக்கதாக உள்ளன. நெரிசலைக் குறைக்கவும், சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கிச்சிபாளையம், எருமாபாளையம் பகுதிகள் நகரப் பகுதி அருகே இருந்த போதிலும், முறையான சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனால், இப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு தலையாயப் பிரச்னையாக உள்ளது.
அதேபோல, கடந்த 50 ஆண்டுகளாக பழைய பேருந்து நிலையம் எவ்வித மேம்பாடு இல்லாமல் அப்படியே உள்ளது.
வேகமயமான நகர மயமாக்கல், நெருக்கடி மிகுந்த சாலை, விசைத்தறி தொழிற்கூடங்களுக்கென தனியாக ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.
பொதுவாக, சேலம் தெற்கு தொகுதியைப் பொருத்தவரையில், போக்குவரத்து நெரிசலும், சுகாதாரச் சீர்கேடும் தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!
சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு
சிரி... சிரி...
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

