திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

சித்திரை தேய்பிறை பஞ்சமி: ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன்.

Updated On :7 மே 2026, 6:48 am IST

சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) ஸ்ரீதங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை பஞ்சமி திதியன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு புதன்கிழமை வாராஹி அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காயில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.