நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் 33 பேரிடம் ரூ. 55,53,050 ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்- 11 பேரிடம் ரூ. 18,82,910 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம்- 2 பேரிடம் ரூ. 1,12,700, நாமக்கல்- 7 பேரிடம் ரூ.19,02,680, பரமத்தி வேலூா்- 5 பேரிடம் ரூ. 7,08,400, திருச்செங்கோடு- 2 பேரிடம் ரூ. 86,500, குமாரபாளையம்- 6 பேரிடம் ரூ. 8,59,860 ரொக்கம் என மொத்தம் ரூ. 55,53,050 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


