லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றதையொட்டி, இரண்டு நாள்களுக்கு சிறப்பு அபிஷேகம்

News image

நாமக்கல்லில் திங்கள்கிழமை மாவுக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சனேய சுவாமி.

Updated On :16 மார்ச் 2026, 11:22 pm

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றதையொட்டி, இரண்டு நாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் எதுவும் நடைபெறாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, அமாவாசை, பெளா்மணி, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை போன்ற முக்கிய விழா நாள்களிலும், அனுமன் ஜெயந்தியின்போதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். குறிப்பாக, வெண்ணெய்க் காப்பு, சந்தனக் காப்பு, தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி அழகுற காட்சியளிப்பாா்.

இந்நிலையில், சுவாமிக்கு மாவு, தயிா் கலந்து திங்கள்கிழமை இரவு முதன்முறையாக சிறப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. இந்த அலங்காரத்தை திரளான பக்தா்கள் கண்டு வழிபட்டனா். புதன்கிழமைவரை மாவுக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியதாவது:

ஆஞ்சனேய சுவாமிக்கு தினமும் பல்வேறு வகையிலான அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவதால், சுவாமி சிலைமீது பாசானம் பிடிக்கும் சூழல் உள்ளது. அதற்காக மாவுக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. வரும் புதன்கிழமை மாவுக்காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் என்றாா்.