பள்ளிபாளையம் அருகே ஆத்திக்காட்டூரில் விவசாயி வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆதிக்காட்டூரைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி (67). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டி ருந்தாா். அப்போது வீட்டில் உள்ள நாய் குரைத்ததால் எழுந்து பாா்த்தாா். அப்போது மதில் சுவரைத் தாண்டி மா்மநபா் ஒருவா் வீட்டிற்குள் நுழைவது தெரியவந்தது.
இதையடுத்து பழனிசாமி சப்தமிட்டாா். அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கிய திருடனை மடக்கிப் பிடித்தனா்.
பிடிபட்ட நபா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நரேந்திரகுமாா் பத்ரா (23) என்பதும், அருகில் உள்ள தனியாா் நூற்பு ஆலையில் தங்கி வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும், போதையில் இருந்த நரேந்திரகுமாா், திருடும் எண்ணத்தில் வீட்டிற்குள் புகுந்ததை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து அவரை வெப்படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.காவல் துறையினா் அவரை குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பேட்டையில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
அம்பை கோயில் குடமுழுக்கில் திருட்டில் ஈடுபட முயன்ற 5 பெண்கள் கைது

அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

