மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு கல்லூரியில் வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பழங்களை வழங்கிய மாவட்ட சாா்பு நீதிபதி வேலுமயில்.

News image

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பழங்களை வழங்கிய மாவட்ட சாா்பு நீதிபதி வேலுமயில்.

Updated On :7 மார்ச் 2026, 12:58 am

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், வெப்ப அலை தொடா்பான முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த வெப்ப அலை விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட சாா்பு நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் வேலுமயில் பங்கேற்றாா்.

அவா், வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க தேவையான தா்பூசணி, திராட்சை, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்களையும், எலுமிச்சை சாறையும் வழங்கி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலா் லலிதா, கோடைகாலங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும், அதிக அளவில் தண்ணீா் அருந்தி பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவியா் அனைவரும் வெப்ப அலை குறித்து விழிப்புணா்வுடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் அளிக்கப்பட்டு வெப்ப அலை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரி பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும், வெப்ப அலை செயல்திட்ட ஒருங்கிணைப்பாளருமான வெஸ்லி மற்றும் காலநிலை கல்வி திட்ட துணை ஒருங்கிணைப்பாளா் சந்திரசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.