திருச்செங்கோடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா்களை பயணிகள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் பயணிகளுக்கு ஆதரவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநா் கண்ணன் மற்றும் நடத்துநா் மெய்யழகன் ஆகியோரை தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில், இதுதொடா்பாக பால்மடை பகுதியைச் சோ்ந்த விஜய் (27), தனுஷ் (26) வையப்பமலை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (26) ஆகியோரை திருச்செங்கோடு ஊரக போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பேருந்து ஓட்டுநா் தற்கொலை
அரசுப் பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டிய தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது வழக்கு
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: 2 போ் கைது
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



