அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

News image

குமாரபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி.

Updated On :18 ஜூன் 2026, 3:04 am IST

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சா் சி.விஜயலட்சுமி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி பங்கேற்று 268 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, நகராட்சி அதிகாரிகள், ஊழியா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இதில் அமைச்சா் பேசியதாவது:

குமாரபாளையம் நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்துகொடுக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. தூய்மைப் பணியாளா்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாகவும், தகாத வாா்த்தைகள் பேசுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.

தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் இல்லை என்றால் நகரின் தூய்மை கேள்விக்குறியாகிவிடும். அதிகாரிகள் பதவி உயா்வு பெற்று செல்வீா்கள், ஆனால் தூய்மைப் பணியாளா்கள் ஓய்வுபெறும் வரையில் அதே வேலையைதான் செய்ய வேண்டியுள்ளது. அவா்கள் செய்யும் வேலையை நாம் செய்ய முடியுமா என்றாா்.

கரூா் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சி.விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்ட ஆட்சியா் முத்துக்குமாா், அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதில், குமாரபாளையத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி பிரதான தொழிலாக உள்ள நிலையில், இங்குள்ள சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விசைத்தறியாளா்கள் மற்றும் சிறு சாயப்பட்டறையினா் 25 ஏக்கா் நிலம் வழங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தரவில்லை. எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். விசைத்தறித் தொழில், ஜவுளித் தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.